search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியர்"

    • மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
    • ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார்.

    மதுரை :

    மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்திருந்த புகார் பெட்டியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடிதம் கிடந்தது. அதில், பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கும் தகவல் கொடுத்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில், முதற்கட்டமாக பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் என 3 பேர் மீது கருப்பாயூரணி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, போக்சோ வழக்கில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில் சக ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கில் மாணவிகளை வைத்து, பொய் புகாரை தலைமை ஆசிரியர் அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே இதுபற்றி விசாரணை நடத்துமாறு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி புலன் விசாரணை நடந்தது.

    பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் ஊமச்சிகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    அப்போது அந்த மாணவிகள், தாங்களாக அந்த கடிதத்தை எழுதவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதால்தான் அவ்வாறு செய்தோம் எனவும், யாரும் எங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக கோர்ட்டு நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட பகையில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளை பழிவாங்க மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தி பாலியல் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து, இதுகுறித்து இறுதி அறிக்கை, கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி, மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், வழக்கின் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் கடந்த 31-ந் தேதி பொய் புகார் என தீர்ப்பளித்து, வழக்கு முடிக்கப்பட்டது.

    மேற்கண்ட தகவல்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தனது சுயலாபத்திற்காக மாணவிகளை பொய் புகார் அளிக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

    • பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியின் பின்புறம் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார். எனவே குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.

    அப்போது மாணவர்களை தாக்கிய நபருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெரித்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்தது.
    • 7-ந் தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதன்கீழ் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவிட பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்கீழ் வருகிற 7-ந்தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

    • அரசு உதவிபெறும் பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி தலைமைஆசிரியர் திட்டியதாக புகார் எழுந்தது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் வைகை அணை சாலையில் புத்தர்நடுநிலைப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமைஆசிரியராக வேணுகோபால் பணியாற்றி வருகிறார். மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறார். இப்பள்ளியில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீச்சுகருப்பனின் 11 வயது மகன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது அந்த மாணவனை ஜாதி பெயரைசொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவன் தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த வீச்சுகருப்பன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தலைமைஆசிரியர் வேணுகோபால் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்குடி அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்தினார்.
    • 2020-ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கபள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன். இவருக்கு வழங்கப்பட வேண்டிய முறையான சம்பள உயர்வை 2013-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்றும், 2017 முதல் வழங்க வேண்டியய 7-வது ஊதியக்குழு ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கூறி பல வருடங்களாக போராடி வருகிறார்.

    2016 முதல் பள்ளி நிர்வாகம் அவரை பணி செய்ய விடவில்லை. 2018-ல் கலெக்டர் உத்தரவிட்டும், 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டும், 2020ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    இது குறித்து தேவ கோட்டை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து காரைக்குடியில் உள்ள சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.காரைக்குடி போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். #NationalTeachersAward
    கோவை:

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

    நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூரில் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டி வரும் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ராமன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சேர்க்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரை, உதவி தலைமை ஆசிரியர் மிரட்டி வருகிறார். உதவி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் ஆசிரியர்கள் 7 பேர் உள்ளனர்.

    இவர்கள், அனைவரும் தலைமை ஆசிரியரின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை. மாறாக எதிர் மறையான செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

    எனவே, உதவி தலைமை ஆசிரியர் தலைமையிலான 7 ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
    ×